யூரோ கிண்ணம் 2024... இங்கிலாந்து அணிக்கு காத்திருக்கும் போனஸ் தொகை
இங்கிலாந்து கால்பந்து அணி இந்த முறை யூரோ கிண்ணத்தை வெல்லும் என்றால் பல மில்லியன் பவுண்டுகள் போனஸ் தொகையாக சம்பாதிக்க உள்ளனர்.
நம்பிக்கையில் இங்கிலாந்து அணி
ஜேர்மனியில் நடக்கும் யூரோ கிண்ணம் 2024 தொடரில் செர்பியா அணியுடன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
கடந்த முறை இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் பெனால்டியில் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஜேர்மனியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நம்பிக்கையில் இங்கிலாந்து அணி உள்ளது.
இந்த நிலையில், யூரோ கிண்ணத்துடன் இங்கிலாந்து அணி நாடு திரும்பினால், மொத்தமாக 14 மில்லியன் பவுண்டுகள் போனஸ் தொகையாக பெற உள்ளனர். ஜூலை 14ம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சாதிக்கும் என்றால் பரிசாக பெறும் 24 மில்லியன் பவுண்டுகள் தொகையில் அணி வீரர்கள் தங்களுக்கு உரிய பங்கைப் பெற உள்ளனர்.
14 மில்லியன் பவுண்டுகள்
அணித் தலைவர் ஹரி கேன் மற்றும் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜூட் பெல்லிங்ஹாம் ஆகிய இருவரும் 9.6 மில்லியன் பவுண்டுகள் வரையில் சம்பாதிக்க உள்ளனர்.
அணியின் மேலாளரான 53 வயது Southgate சுமார் 4 மில்லியன் பவுண்டுகள் வரையில் போனஸ் பெறுவார். மொத்தம் 14 மில்லியன் பவுண்டுகள் போனஸ் தொகையாக அளிக்கப்பட உள்ளது.
ஞாயிறன்று நடக்கும் செர்பியா அணியுடனான முதல் போட்டியில் இங்கிலாந்து வெல்ல வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. கடந்த 2003ல் நட்பு ரீதியான ஆட்டத்தில் செர்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |