கத்தார் உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றால்! ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்கும் தொகை தெரியுமா?
கத்தாரில் நடந்துவரும் கால்பந்து உலகக் கோப்பையை வென்றால் இங்கிலாந்து வீரர்களுக்கு பெருந்தொகை வெகுமதியாக காத்திருக்கிறது.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து சிதறடித்துள்ளது. இதனால் காலிறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
@getty
ஆட்டத்தின் பதட்டமான தொடக்கத்திற்குப் பிறகு, ஜோர்டான் ஹென்டர்சன் மற்றும் ஹரி கேன் ஆகியோர் முதல் பாதியில் தலா ஒரு கோல் அடிக்க, இரண்டாவது பாதியில் புகாயோ சாகா ஆட்டத்தை ஆப்பிரிக்க சாம்பியன்களுக்கு எட்டாத தொலைவுக்கு எடுத்துச் சென்றார்.
மூன்று ஆட்டங்களையும் வென்றால்
இந்த நிலையில், இங்கிலாந்து அணி அடுத்த மூன்று ஆட்டங்களையும் வென்றால், ஒவ்வொரு வீரர்களும் 400,000 பவுண்டுகள் முதல் 450,000 பவுண்டுகள் வரையில் வெகுமதியாக அள்ள இருக்கின்றனர்.
@PA
உலகக் கிண்ணத்தை வெல்லும் இங்கிலாந்து அணிக்காக மொத்தம் 13 மில்லியன் பவுண்டுகள் தொகை காத்திருக்கிறது. 2018ல் ரஷ்யாவில் உலகக் கோப்பையை கைப்பற்றிய அணிக்கு அளிக்கப்பட்ட தொகையைவிட இருமடங்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
அணி மேலாளர் Gareth Southgate மட்டும் 3 மில்லியன் பவுண்டுகள் தொகையை அள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
@getty