134 இலக்கு நிர்ணயித்த அவுஸ்திரேலியா: 5.1 ஓவர்களில் 50 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணி வெற்றி
அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி DLS முறையில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி சிட்னியில் நடந்தது.
முதலில் ஆடிய 18 ஓவர்களில் 133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜார்ஜியா வார்ஹம் 30 (19) ஓட்டங்களும், லிட்ச்பீல்ட் 26 (19) ஓட்டங்களும் எடுத்தனர்.

அபாரமாக பந்துவீசிய அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகளும், ரேணுகா சிங் மற்றும் ஸ்ரீசரணி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வெர்மா அதிரடியாக11 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 21 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இந்திய அணி வெற்றி
இந்திய அணி 5.1 ஓவர்களில் 50 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் DLS முறையில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஸ்ம்ரிதி மந்தனா 16 ஓட்டங்களுடனும், ஜெமிமா ரோட்ரிகஸ் 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |