சிக்ஸர் மழை பொழிந்தும் தோல்வி: இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதும் இந்திய அணி
மகளிர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி 337
கொழும்பில் நடந்த ஒருநாள் போட்டியில் மகளிர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுக்கு 337 ஓட்டங்கள் குவித்தது. ஜெமிமா ரோட்ரிகஸ் 123 (101) ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 93 (84) ஓட்டங்களும், ஸ்மிருதி மந்தனா 51 (63) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் மியானே ஸ்மித் 39 (54) ஓட்டங்களும், ஷங்கஸே 36 (36) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அன்னெரி டெர்க்சன் அபாரமாக ஆடி 80 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல் அணித்தலைவர் க்ளோ ட்ரையான் சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
தீப்தி ஷர்மா அபாரம்
கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 27 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், தீப்தி ஷர்மாவின் அபார பந்துவீச்சினால் தென் ஆப்பிரிக்கா அந்த ஓவரில் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், இந்திய அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ட்ரையான் 43 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்களும், நாடினே டி கிளெர்க் 22 (13) ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் தரப்பில் அமன்ஜோட் கவுர் 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 11ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |