மகளிர் ஆசியக் கிண்ணம்: அமீரகத்தை ஊதித்தள்ளிய இந்திய அணி
தம்புள்ளையில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி, 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அமீரக அரபு அணியை வீழ்த்தியது.
இலங்கையில் நடந்து மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் 5வது போட்டியில் இந்தியா - ஐக்கிய அமீரக அரபு அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) 66 (47) ஓட்டங்களும், ரிச்சா கோஷ் 64 (29) ஓட்டங்களும் விளாசினர்.
Harmanpreet Kaur's 12th T20I fifty ?
— Female Cricket (@imfemalecricket) July 21, 2024
2nd in Women's T20 Asia Cup ? #CricketTwitter #INDvUAE pic.twitter.com/FXGCilpUey
பின்னர் களமிறங்கிய அமீரக அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்களே எடுத்ததால், இந்தியா 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக கவிஷா எகோடகே 40 (32) ஓட்டங்களும், ஈஷா 38 (36) ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணியின் தரப்பில் தீப்தி ஷர்மா 23 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
List of Indian wicket-keeper batter to score a Fifty in Women's Asia Cup:
— Female Cricket (@imfemalecricket) July 21, 2024
• Richa Ghosh
<end of the list>pic.twitter.com/BYWMOnipBT#CricketTwitter #INDvUAE
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |