இலங்கை முத்தரப்பு தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர் போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 276 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பிரதிகா ராவல் அரைசதம்
கொழும்பில் மகளிர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து ஆடியது. ஸ்மிருதி மந்தனா 36 (54) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பிரதிகா ராவல் 5வது அரைசதம் விளாசினார்.
அணியின் ஸ்கோர் 151 ஆக உயர, பிரதிகா ராவல் (Pratika Rawal) 91 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
ரிச்சா கோஷ் அதிரடி
அதன் பின்னர் 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹர்லீன் தியோல் அவுட் ஆக, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்த கூட்டணியின் மூலம் இந்திய அணி 200 ஓட்டங்களை கடந்தது. ஜெமிமா ரோட்ரிகஸ் 41 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கிளாஸ் ஓவரில் அவுட் ஆனார். எனினும் ரிச்சா கோஷ் அதிரடியாக 14 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் விளாசினார்.
அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டமிழக்காமல் 41 (48) ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 276 ஓட்டங்கள் சேர்த்தது. லாபா 2 விக்கெட்டுகளும், காகா, கிளாஸ், அன்னெரி மற்றும் நாடினே டி கிளெர்க் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |