புதிய Windows 11 அப்டேட்: நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்..,
விண்டோஸ் 11-ல் இருக்கும் புதிய அம்சங்கங்கள் என்ன, அதனை பயன்படுத்த கணினியின் தேவை என்ன, அதனை எப்போது அப்டேட் செய்துகொள்ளலாம் ஆகிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் Windows 11-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய Operating System (OS) விண்டோஸ் 10 PC-களுக்கான புதுப்பிப்பாக வந்துள்ளது. புதிய Windows 11 OS-க்கான அப்டேட்டை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதற்கான கணினி தேவைகளுடன் தொடங்கி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
விண்டோஸ் 11: கணினி தேவைகள் என்ன?
உங்கள் கணினிக்கு விண்டோஸ் 11-ஐ இயக்க, அதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட core மற்றும் 1GHz அல்லது அதற்கு மேற்பட்ட clock speed கொண்ட ஒரு செயலி தேவைப்படும். இது 4 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட RAM மற்றும் குறைந்தபட்சம் 64 ஜிபி ஸ்டோரேஜையும் கொண்டிருக்க வேண்டும். கணினிக்கு குறைந்தது TPM 1.2 அல்லது அதற்கு மேற்பட்ட TPM பாதுகாப்பு பதிப்பு மற்றும் Secure Boot Capable ஆதரவு தேவைப்படும்.
அதாவது, இன்டெல்லின் ஆறாவது மற்றும் ஏழாம் தலைமுறை (Intel 5 & 6th Gen) செயலிகளை இயக்கும் எந்த கணினியிலும் இந்த புதிய விண்டோஸ் 11 புதுப்பிப்பைப் பெற முடியாது. மேலும், AMD அடிப்படையிலான கணினிகளில், A -சீரிஸ் மற்றும் FX -சீரிஸ், Ryzen 1000 மற்றும் பெரும்பாலான Ryzen 2000 சிப்களில் விண்டோஸ் 11-ஐ இயக்க முடியாது.
விண்டோஸ் 11க்கு குறைந்தபட்சம் 720p தெளிவுத்திறனுடன் 9 அங்குல டிஸ்பிலே கொண்டிருக்க வேண்டும், மேலும் உங்கள் கணினிக்கு DirectX 12 கிராபிக்ஸ் அல்லது WDDM2.x ஆதரவு இருக்க வேண்டும். உங்கள் PCல், ஏதேனும் குறை இருந்தால், அதற்கு தொடர்புடைய கூறுகளை (components) மேம்படுத்திக்கிக்கொண்டு Windows 11 அப்டேட்டை பெறலாம்.
விண்டோஸ் 11 புதுப்பிப்புக்கு தகுதிபெற உங்கள் லேப்டாப்பில் துல்லியமான டச்பேட் (TouchPad) இருக்க வேண்டும் என்றும் XDA டெவலப்பர்களின் அறிக்கை தெரிவிக்கிறது. உங்கள் மடிக்கணினி இந்த தேவைகள் எதையும் பூர்த்தி செய்யவில்லை என்றால், நீங்கள் விண்டோஸ் 11 ஐ இயக்க முடியாது.
விண்டோஸ் 11-ல் புதிதாக என்ன இருக்கிறது?
Windows 11 புதிய பயனர் இடைமுகம் (new user interface), புதிய விண்டோஸ் ஸ்டோர் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. Overhauled design language எனும் அம்சம் உள்ளது. புதிய centre-aligned Taskbar மற்றும் Start button இதில் உள்ளது.
விண்டோஸ் 8 முதல் ஏதோவொரு வடிவத்தில் இருந்த Live Tiles-க்கு பதிலாக, புதிய Start Menu-வில் மறுசீரமைக்கப்பட்டு பின் செய்யக்கூடிய ஐகான்களின் கட்டம் grid of icons உள்ளது.
காலெண்டர், வானிலை, விளையாட்டு லீடர்போர்டு போன்றவற்றை உள்ளடக்கிய விட்ஜெட்களுடன் rounded corners உள்ளன. புதிய split Notifications மற்றும் Quick Actions UI உடன் மேம்படுத்தப்பட்ட System Tray உள்ளது. மேலும், விண்டோஸ் புதுப்பிப்பு 40 சதவீதம் சிறியதாக இருக்கும் மற்றும் பின்னணியில் நிறுவப்படும் புதுப்பிப்புகளுடன் வேகமாகவும் திறமையாகவும் இருக்கும்.
[11H4J8]
விண்டோஸ் 11-ஐ எப்படி, எப்போது பெறலாம்?
விண்டோஸ் 11 இந்த ஆண்டின் பிற்பகுதியில் நுகர்வோருக்கு அனுப்பத் தொடங்குகிறது. மேலும் விண்டோஸ் இன்சைடர்ஸ் (Windows Insiders) Windows 11-ன் முன்னோட்டத்தை அடுத்த வார தொடக்கத்தில் சோதித்து பார்க்கலாம். இதனை சோதிக்க, ஆர்வமுள்ள பயனர்கள் விண்டோஸ் இன்சைடர் இணையதளத்தில் விண்டோஸ் இன்சைடர் திட்டத்திற்கு தங்களை பதிவு செய்யலாம்.
முக்கிய குறிப்பு: உங்களிடம் விண்டோஸ் 10 மற்றும் குறைந்தபட்ச கணினி தேவைகள் இருக்கும் வரை, உங்களுக்கு விண்டோஸ் 11 ஒரு இலவச அப்டேட்டாக இருக்கும்.