இளவரசர் வில்லியம் குடும்பம் வாழும் மாளிகைக்குள் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள்
பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாழும் விண்ட்சர் மாளிகை எஸ்டேட்டுக்குள், முகமூடிக்கொள்ளையர்கள் நுழைந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசர் வில்லியம் வாழும் மாளிகைக்குள் முகமூடிக் கொள்ளையர்கள்
இளவரசர் வில்லியம் தனது மனைவியான இளவரசி கேட், தங்கள் பிள்ளைகளான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸுடன் விண்ட்சர் மாளிகை எஸ்டேட்டில் அமைந்திருக்கும் Adelaide Cottage என்னும் வீட்டில் வாழ்ந்துவருகிறார்.
Credit: Alamy
இந்நிலையில், இளவரசர் வில்லியம் வாழும் விண்ட்சர் மாளிகை எஸ்டேட்டுக்குள் இரண்டு முகமூடிக்கொள்ளையர்கள் நுழைந்துள்ளார்கள்.
ஆறு அடி உயர வேலியைத் தாண்டிக் குதித்த கொள்ளையர்கள், எஸ்டேட்டில் இருந்த பண்ணை ஒன்றிற்குள் நுழைந்துள்ளார்கள்.
Credit: Getty
அங்கிருந்து இரண்டு வாகனங்களைத் திருடிக்கொண்டு, ஒரு ட்ரக்கின் உதவியால் கதவை மோதி உடைத்து அங்கிருந்து தப்பியுள்ளார்கள் அந்தத் திருடர்கள்.
விடயம் என்னவென்றால், முன்பெல்லாம் மாளிகையின் எல்லா கதவுகளின் முன்பும் ஆயுதம் ஏந்திய பொலிசார் நிற்பார்களாம்.
Credit: Reuters
ஆனால், மாளிகையை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் அவர்களைக் கண்டு பயப்படுவதாலும், தகுதியுள்ள போதுமான பொலிசார் இல்லாததாலும், இப்போது எஸ்டேட்டின் முன்னால் மட்டுமே ஆயுதம் ஏந்திய பொலிசார் நிற்கிறார்கள்.
இதை நீண்ட நாட்களாக கவனித்துவந்த கொள்ளையர்கள், தற்போது எஸ்டேட்டுக்குள் நுழைந்து கைவரிசையை காட்டிவிட்டார்கள்.
அந்த முகமூடிக்கொள்ளையர்களை பொலிசார் தீவிரமாக தேடிவரும் நிலையில், இளவரசர் வில்லியம் குடும்பம் வாழும் வீட்டின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |