பிரித்தானியாவில் பரபரப்பு! பயங்கர ஆயுதத்துடன் கோட்டைக்குள் ஊடுருவ முயன்ற நபர்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக பிரித்தானிய மகாராணியார் வந்திருந்த விண்ட்ஸர் கோட்டைக்குள் ஆயுதம் ஏந்தியபடி ஒள்று இளைஞர் நுழைய ஏற்பட்டது.
சனிக்கிழமையன்று காலை 8.30 மணியளவில்பிரித்தானிய மாகாராணியார் இரண்டாம் எலிசபெத் கிறிஸ்துமஸ் பெருவிழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கையில் குறுக்கு வில் ஏந்தியபடி கோடடைக்குள் ஊடுருவ முயன்ற அந்த 19 வயது இளைஞரை, உடனடியாக ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் பிடித்தனர்.
சம்பவத்தின் போது சந்தேக நபர் கட்டிடத்தின் எந்த பகுதிக்குள்ளும் நுழைய முடியவில்லை என்று தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
மேலும், அலாரம் அடிக்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அரச குடும்பத்திற்கு தெரியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சவுத்தாம்ப்டனைச் சேர்ந்த அந்த 19 வயது இளைஞர் பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது, நாங்கள் பெருநகர காவல்துறையின் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று கண்காணிப்பாளர் ரெபேக்கா மியர்ஸ் ஒரு அறிக்கையில் கூறயுள்ளார்.