அந்தரத்தில் சாகசம்... விமான இறக்கையில் சிக்கி நடந்த பயங்கரம்: கொலை வழக்கில் விமானி
பிரான்ஸில் பாராசூட் சாகசம் செய்பவர் ஒருவர் 14,000 அடி உடரத்தில் விபத்தில் சிக்கி, தலை துண்டிக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்தில் தற்போது கொலை வழக்கை எதிர்கொள்கிறார் விமானி.
விமானத்தின் இறக்கையில் சிக்கி
பிரான்சில் கடந்த 2018ல் தொடர்புடைய கோர விபத்து நடந்துள்ளது. 40 வயதான பாராசூட் சாகச வீரர் Nicolas Galy சம்பவத்தின் போது விமானத்தின் இறக்கையில் சிக்கி தலை துண்டிக்கப்பட்டு இறந்தார்.
@sinesp
சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து குதித்த நிலையிலேயே அவர் விமான இறக்கையில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்த விமானத்தின் விமானி அலைன் தற்போது கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
பாராசூட் சாகச பள்ளி ஒன்றில் பணிபுரிந்தவர் அலைன். சம்பவத்தன்று தமது ஒற்றை எஞ்சின் பைலடஸ் விமானத்தை Bouloc-en-Quercy பகுதிக்கு மேலே செலுத்தியுள்ளார். ஆனால் அனுபவம் மிகுந்த பாராசூட் சாகச வீரரான நிக்கோலஸ் அந்த விமானத்தில் இருந்து குதித்த 20 நொடிகளில், அந்த விமானத்தின் இறக்கையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
இதில் அவரது தலை துண்டாக, தலை இல்லாத உடல் மட்டும் பூமியில் தரையிறங்கியது. இந்த விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லாத விமானி அலைன் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார்.
அதில் தமக்கு பங்கில்லை
உண்மையில், விமானத்தில் இருந்து குதித்ததும் திட்டமிட்ட திசையை விட வேறு திசையில் நிக்கோலஸ் பறந்ததாக அலைன் விளக்கமளித்துள்ளார். மட்டுமின்றி, நிக்கோலஸ் தமது பார்வையில் படவில்லை என்றே அலைன் குறிப்பிட்டுள்ளார்.
@getty
மொத்தம் 226 முறை அந்தரத்தில் குதித்து சாகசம் செய்த அனுபவம் கொண்டவர் நிக்கோலஸ். ஆனால் அன்று அவர் எடுத்த முடிவு வழக்கத்திற்கு மாறானது, அதுவே அவரது உயிரை பலி வாங்கியது என்றார் அலைன்.
விமானத்தில் இருந்து குதித்த பின்னர், எந்த விபரீதமும் விமானியின் பொறுப்பாகாது என குறிப்பிட்டுள்ள அலைன், அந்த சம்பவம் தமது வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய துயரம், ஆனால் அதில் தமக்கு பங்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |