தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையில்.., 100 கிலோ லட்டு ஓர்டர் கொடுத்த காங்கிரஸ்
மத்திய பிரதேசத்தில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் 100 கிலோ லட்டு ஓர்டர் கொடுத்துள்ளனர்.
100 கிலோ லட்டு ஓர்டர்
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு முறை சரிவை சந்தித்த போதிலும், இந்த முறை வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர்.
அதோடு, வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 -ம் திகதி வாக்குப்பதிவு இயந்திரத்தைக் நன்றாக கவனிக்கும்படி கட்சித்தலைமை வலியுறுத்திப்பதாக கூறப்படுகிறது.
பின்னர், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்க கட்சியின் செய்தித்தொடர்பாளர் அவ்நீஷ் பண்டேலா 100 கிலோ லட்டு ஓர்டர் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அவ்நீஷ் பண்டேலா கூறுகையில், "பாஜக கட்சி மக்களுக்காக உழைத்திருந்தால் வாய்ப்பு கொடுத்திருப்பார்கள். ஆனால், இந்த முறைபாஜகவால் கொண்டாட முடியாது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போபால் வருவதற்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ரயில் டிக்கெட்பதிவு செய்துள்ளனர். இது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. அரசினை மாற்றும் முடிவை மக்கள் எடுத்துவிட்டனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |