சின்னதாக இலங்கைத் தம்பதியர் தயாரிக்க தொடங்கிய உணவுப்பொருள்: இன்று ஆல்பர்ட்டா முதல் ஒன்ராறியோ வரை அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும்...
சின்னதாக வீட்டளவில் நண்பர்களுக்காக சாஸ் ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கினார்கள் வின்னிபெகில் வாழும் இலங்கைத் தம்பதியரான அமிலா ராஜகருணாவும் அர்ஷலா டோனாவும்.
2016ஆம் ஆண்டு, சில நண்பர்களுக்காக இலங்கை உணவின் அடிப்படையில் ஹாட் சாஸ் ஒன்றை உருவாக்க முடிவு செய்தார் ராஜகருணா.
ஆனால், இன்று, ஆல்பர்ட்டா முதல் ஒன்ராறியோ வரையுள்ள பல இடங்களில் அமைந்துள்ள Red River Co-op, Sobeys, Safeway, Lucky Supermarket துவங்கி சென்ற மாதம் Walmart வரை அவர்களது ஹாட் சாஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்போது வின்னிபெகிலுள்ள சமுதாய நலக்கூடம் ஒன்றின் சமையலறையை வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் சாஸ் தயாரிக்கிறார்கள் தம்பதியர்.
சொந்தத் தொழில் துவங்கவேண்டும் என்ற அவா நீண்ட நாட்களாகவே ராஜகருணாவுக்கு இருந்துள்ளது. அவரது மனைவி டோனாவும் ஒரு உணவு அறிவியலாளர் என்பதால், தரக்கட்டுப்பாட்டை அவர் பொறுப்பெடுத்துக்கொள்ள தம்பதியர் ஹாட் சாஸ் தயாரிக்கிறார்கள்.
அதற்கு பெயர் வைத்த பெருமை தம்பதியரின் பிள்ளைகளுக்குத்தான். தம்பதியரின் மகள் எப்போதும் பசி வந்தால் டேஸ்ட் டேஸ்டி என்பாளாம். அந்த பெயரையே தங்கள் சாஸுக்கு அவர்கள் வைக்க, கூடவே அவர்களது மகன் வெப்பம் குறித்த ஒரு பெயரையும் சேர்த்துக்கொள்வோம் என்று ஆலோசனை கூற, பிறந்தது Tasty Heat's ஹாட் சாஸ்!
இன்னும் சிலரை வேலைக்கு வைத்து, கொஞ்சம் பெரிய அளவில் சாஸ் தயாரிக்க விரும்பும் தம்பதியர், மனித்தோபாவிலேயே தங்களுக்கான மிளகாய் முதலானவற்றையும் வளர்க்கவும் திட்டமிட்டு வருகிறார்கள்.
மனித்தோபாவில் வளர்ந்த மிளகாயைக் கொண்டு இலங்கைத் தம்பதிகள் உருவாக்கும் ஒரு சாஸ், அதாவது உள்ளூர் மக்களையும் இணைத்து செய்யும் இந்த தொழிலை நான் என்னுடைய தொழிலாக பார்க்க விரும்பவில்லை, அதை எல்லோருடைய பங்களிப்பும் உள்ள தொழிலாக பார்க்கவிரும்புகிறேன் என்கிறார் ராஜகருணா...