27 மாகாணங்களில்... மில்லியன் கணக்கான மக்களுக்கு பெரும் குளிர்காலப் புயல் எச்சரிக்கை
கலிபோர்னியாவின் மலைகள் ஏற்கனவே 10 அடி பனிக்கு அடியில் புதைந்துள்ள நிலையில், மேற்கு கடற்கரையிலிருந்து, அமெரிக்காவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அச்சுறுத்தும் ஒரு பெரிய குளிர்கால புயல் அச்சுறுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு
இந்த வார இறுதியில் மற்றும் வார இறுதிக்குள் 27 மாகாணங்களில் குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வெளியான தகவலின் அடிப்படையில், உருவாகி வரும் பசிபிக் புயல் ஏற்கனவே மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பெரும்பகுதியை குளிர்கால புயல் எச்சரிக்கையின் கீழ் கொண்டுவந்துள்ளது.
வரும் நாட்களில் வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பகுதிகளுக்கு கடும் பனி பரவக்கூடும் என்றும், இதனால் கிழக்கு கடற்கரை நேரடியாக புயலின் பாதையில் செல்லக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் குளிர்காலத்தின் இரண்டாவது அலை இன்னும் உறுதியாகவில்லை என்றே தெரிவிக்கின்றனர். மட்டுமின்றி, இவை அனைத்தும் புயலின் பாதை மற்றும், வாஷிங்டன், டி.சி., பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க் நகரம் மற்றும் பாஸ்டன் உள்ளிட்ட இன்டர்ஸ்டேட் 95 ல் உள்ள முக்கிய நகரங்களுக்கு பனியைக் கொண்டு வர போதுமான குளிர் காற்று இருக்கிறதா என்பதையும் பொறுத்தது என்றே தெரிவிக்கின்றனர்.
புதன்கிழமை வாக்கில், டோனர் பாஸ் ஐந்து அடிக்கு மேல் பனியைக் குவித்திருந்தது. வியாழக்கிழமை அதிகாலை அளவீடுகள் வடக்கு மற்றும் மத்திய நெவாடாவில் கடந்த 72 மணி நேரத்தில் 55 முதல் 70 அங்குல பனியைக் காட்டின, மேலும் கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை இரவு வரை, தெற்கு கலிபோர்னியா கணவாய்களில் 1 முதல் 6 அங்குல பனி பெய்யக்கூடும், மலைகள் மற்றும் சிகரங்கள் பல அடிகளுக்குள் புதைந்திருக்கும்.
இதனிடையே, வடக்கு கலிபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் ஒரு பெரிய குழு பனிச்சறுக்கு வீரர்கள் சிக்கிக்கொண்டனர், குறைந்தது எட்டு பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் மாயமாகியுள்ளார்.
ஆபத்தான சூழ்நிலைகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இரண்டும் பல நாள் புயலை எதிர்பார்க்கலாம், மொத்த மழைப்பொழிவு 2 முதல் 4 அங்குலத்தை எட்டும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு உட்டாவில், தேசிய வானிலை சேவை மையம் உயிருக்கு ஆபத்தான' பனிப்புயல் எச்சரிக்கையை வெளியிட்ட நிலையில், 160,000 க்கும் மேற்பட்ட மக்கள் சில நிமிடங்களில் எதிர்வினையாற்றியுள்ளர்.
கடும் பனி மற்றும் பலத்த காற்று வீசுவதால், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும், சாலைகளில் ஆபத்தான சூழ்நிலைகள் உருவாகும் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்டானா, தெற்கு டகோட்டா மற்றும் மினசோட்டா ஆகியவை பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன, புயல் கிழக்கு நோக்கி நகர்வதால் அருகிலுள்ள மாகாணங்களில் ஏற்கனவே மணிக்கு 70 மைல் வேகத்தை தாண்டி காற்று வீசக்கூடும்.
மூன்று மாகாணங்களில் வசிப்பவர்கள் அவசர காலங்களில் மட்டுமே பயணம் செய்யவும், குளிர்கால உயிர்வாழும் கருவியை எடுத்துச் செல்லவும், சிக்கிக்கொண்டால் தங்கள் வாகனத்துடன் தங்கவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |