துரித நடவடிக்கை தேவை... சுவிஸில் குளிர்காலம் கடினமாக இருக்கும்: எச்சரிக்கும் நிபுணர்
கொரோனாவுக்கான தடுப்பூசி சதவீதம் மிகவும் குறைவாக காணப்படுவதால், இந்த ஆண்டு குளிர்காலம் நிச்சயமாக கடினமாக இருக்கும் என பணிக்குழு தலைவர் Tanja Stadler தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் கொரோனா அறிவியல் பணிக்குழு தலைவரான Tanja Stadler, இது தொடர்பில் தெரிவிக்கையில், துரித நடவடிக்கை முன்னெடுக்க தவறினால் நாம் சிக்கலில் சிக்கிவிடுவோம் என்றார்.
சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதுடன், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை சரிவடைந்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தாமதப்படுத்தும் அல்லது மறுக்கும் மக்களுக்கு, கண்டிப்பாக குளிர்காலம் மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கப்போகிறது என்றார் Tanja Stadler. மட்டுமின்றி, அடுத்த சில வாரங்களுக்கான அதிரடி நடவடிக்கைகளை பெடரல் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும், மிக விரைவில் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் அலட்சிய போக்கு நீடிக்கும் எனில், கண்டிப்பாக 30,000 வரையில் மருத்துவமனையை நாடும் நிலை உருவாகும் என்றார் Tanja Stadler.
மாஸ்க் கட்டாயப்படுத்தப்படுவதும், தடுப்பூசி சான்றிதழ் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதும், ஊரடங்கு அல்லது பூஸ்டர் தடுப்பூசி உள்ளிட்டவைகள் அதிக பலனைத் தரும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்னொருமுறை நாடுதழுவிய ஊரடங்கு அமுலுக்கு வராது என்றே நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.