தந்தையை இழந்தவுடன் தொழிலுக்குள் நுழைந்த 21 வயது இளைஞர்; அவருடைய சம்பளம்...
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அசிம் பிரேம்ஜி ரூ. 2,00,000 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார்.
முகேஷ் அம்பானியை விட பெரிய பணக்காரர்
ரூ. 8,11,753 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் கௌதம் அதானி தற்போது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
அதற்கு முன்னதாக, இந்தியாவின் பணக்காரர் பட்டத்தின் ஒரு முக்கிய போட்டியாளராக விப்ரோவின் அசிம் பிரேம்ஜி இருந்தார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் இருக்கிறார்.
யார் இந்த அசிம் பிரேம்ஜி?
குஜராத் மாநிலத்தில் பிறந்த அசிம் பிரேம்ஜி, தனது 21 வது வயதில் தந்தையை இழந்த பின்னர் விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
சமையல் எண்ணெய், காய்கறி வியாபாரம் என சிறிய அளவில் இருந்த வணிகமானது, அசிம் பிரேம்ஜி பொறுப்பேற்ற பிறகு உலகறியும் வகையில் பெரிய நிறுவனமாக வளர்ந்தது.
1981-82ஆம் ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தில் விப்ரோ நிறுவனம் கால்பதித்தது.
அதையடுத்து மென்பொருள் தயாரிப்பு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் வளர்ச்சி கண்டது.
2000ஆம் ஆண்டில் அமெரிக்க பங்குச் சந்தையில் இந்திய நிறுவனமான விப்ரோ பட்டியலிடப்பட்டது.
நாட்டின் மிகப்பெரிய 3 ஆவது நிறுவனமாகிய பின், 2004ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் வருவாய் பெற்றது.
அசிம் பிரேம்ஜி சுமார் 53 ஆண்டுகள் விப்ரோவை முன்னின்று நடத்தினார். பின் 2019 இல், பிரேம்ஜியின் மகனான ரிஷாத், விப்ரோவின் செயல் தலைவராக ஆனார்.
விப்ரோ லிமிடெட்
விப்ரோ லிமிடெட் ஆறு கண்டங்களில் 250,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஏழு மாநிலங்களில் உள்ள 350,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுடன் இணைந்து அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |