விப்ரோ மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் கூட்டணி: நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ(Wipro), ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸுடன்(Etihad Airways) ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், எதிஹாட் ஏர்வேஸின் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் பணிகளை விப்ரோ மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
விப்ரோ நிறுவனம் எதிஹாட் ஏர்வேஸின் பணியிடங்கள், நெட்வொர்க், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவை மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்தும்.
இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விப்ரோ எதிஹாட் நிறுவனத்திற்கு தேவையான நிகழ் நேர கிளவுட் உள்கட்டமைப்புகளையும், சேவைகளையும் வழங்கும்.
இதன் மூலம் இரண்டு நிறுவனங்களுமே ஒட்டுமொத்த செயல்திறன் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றன.
விப்ரோவின் சமீபத்திய லாபம்
விப்ரோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட காலாண்டு அறிக்கையின்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 3,353 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட 24% அதிகம் ஆகும்.
பங்கு மதிப்பு உயர்வு
எதிஹாட் ஏர்வேஸுடன் விப்ரோ நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியானதை அடுத்து, ஜனவரி 31ஆம் திகதி அன்று விப்ரோ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு சுமார் 1% அதிகரித்து 302.12 ரூபாய் என வர்த்தகமானது.
இந்த ஒப்பந்தம் இரண்டு நிறுவனங்களுக்குமே ஒரு முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. விப்ரோவின் தொழில்நுட்ப திறன்கள் எதிஹாட் ஏர்வேஸின் டிஜிட்டல் மாற்றத்திற்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |