முன்னாள் ஊழியரிடம் இழப்பீடாக ரூ 25 கோடி கேட்கும் அசிம் பிரேம்ஜியின் விப்ரோ: என்ன காரணம்
அசிம் பிரேம்ஜியின் விப்ரோ நிறுவனத்தில் நீண்ட 21 ஆண்டுகள் பணியாற்றி, வெளியேறிய ஊழியர் ஒருவரிடம் இழப்பீடாக ரூ 25 கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது அந்த நிறுவனம்.
இழப்பீட்டு கேட்டு
இழப்பீட்டு தொகை மட்டுமின்றி, செப்டம்பர் 29 முதல் ஆண்டுக்கு 18 சதவிகித வருடாந்திர வட்டியுடன் சேர்த்து வழங்க்கவும் கோரியுள்ளது. விப்ரோ நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜதின் தலால் தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.
இதுவே விப்ரோ நிறுவனத்தை இழப்பீட்டு கேட்டு நீதிமன்றத்தை நாட வைத்துள்ளது. அதாவது non-compete clause என்ற விதியின் அடிப்படையில், எந்த விப்ரோ ஊழியரும் பதவியை விட்டு விலகிய ஒருவருடத்திற்குள், தங்களின் போட்டி நிறுவனத்தில் வேலைக்கு சேரக்கூடாது.
ஆனால் நீண்ட 21 வருட பணிக்குப் பிறகு செப்டம்பரில் விப்ரோவில் இருந்து ராஜினாமா செய்த ஜதின் தலால் டிசம்பரில் காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த விவகாரத்தில் தற்போது ஜனவரி 3-ம் திகதி இரு தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்கும் என்றே கூறப்படுகிறது.
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், காக்னிசண்ட் நிறுவனத்தில் ஜதின் தலாலின் ஆண்டு சம்பளம் ரூ.43 கோடி என்றே தெரியவந்துள்ளது. ஆனால் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது அவரது சம்பளமானது 2022ல் ரூ 12.07 கோடி என்பது 2023ல் 8.92 கோடி என குறைக்கப்பட்டுள்ளது.
கணக்கிடப்பட்ட தொகையை
இதுவும் அவர் பதவி விலக ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2002ல் இருந்தே ஜதின் தலால் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2011 முதல் 2015 வரையில் தலைமை நிதி நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார்.
விப்ரோவில் இணையும் முன்னர் General Electric நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது விப்ரோ நிறுவனத்தின் non-compete clause என்ற விதியை ஜதின் தலால் மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில்,
கடந்த 12 மாதங்களில் ஈட்டிய மொத்த ஊதியத்திற்கு சமமான கணக்கிடப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என விப்ரோ கோரியுள்ளது. அதாவது ரூ 25.15 கோடி தொகையை ஜதின் தலால் விப்ரோவுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என அந்த நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |