அமெரிக்காவில் 17 வயது சிறுவன் அரங்கேற்றிய கொடூரம்! அழுகிய நிலையில் கிடைத்த தாய், மாற்றாந்தந்தையின் உடல்கள்
அமெரிக்காவில் தனது பெற்றோரை கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
17 வயது சிறுவன்
Wisconsin பகுதியைச் சேர்ந்த 17 மாணவர் நிகிதா காசாப், இரட்டைக்கொலை வழக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது தாய் டட்டியானா மற்றும் மாற்றாந்தந்தை டொனால்ட் மேயர் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
இதனையடுத்து பிப்ரவரி 28ஆம் திகதி சோதனையின்போது, கொல்லப்பட்ட பெற்றோரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.
பின்னர் நடந்த விசாரணையில் சிறுவன் டட்டியானா, தனது உயிரை மாய்த்துக்கொள்வது பற்றி கற்பனை செய்ததாக முன்பு வகுப்பு தோழியிடம் கூறியது தெரிய வந்தது.
1 மில்லியன் டொலர்
மேலும், கொலைகள் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, டட்டியானா தனது பெற்றோரின் காரினை ஓட்டிக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைத்த வீடியோ காட்சிகளில், டட்டியானா மெழுவர்த்திகளை ஏற்றி வைக்க அறைக்குள் நுழைகிறார். ஒரு கட்டத்தில் அவர் கமெராவைப் பார்த்து 'நீங்கள் அவரை அங்கே பார்க்கலாம். என்னால் உண்மையில் அவரின் அழுகிய உடலை பார்க்க முடியும்' என்கிறார்.
இந்த வழக்கில் சிறுவன் டட்டியானா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, அவரது பிணைத்தொகை 1 மில்லியன் டொலர் என நிர்ணயிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |