ஐரோப்பா உட்பட பல நாடுககளின் கல்விக் கழகங்கள் ஒன்றிணைந்து விசேட அறிக்கை
தமிழீழ விடுதலைக்காக காலங்காலமாக உழைத்தவர்களை அணியாகக் கொண்ட அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை, எப்போதும் தமிழீழ விடுதலைக்கு எதிரான எந்த ஒரு செயற்பாட்டையும் சகித்துக்கொள்ளாது என்பதுடன், தவறுகள் நடந்திருப்பின் உடனடியாக அவற்றைத் திருத்திக்கொள்ளவும் தயங்காது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளது.
12 நாடுககளின் கல்விக் கழகங்களுடன் ஒன்றிணைந்து, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மாணவர்களின் தமிழ்மொழிக் கல்விக் கொள்ளைகளை வகுப்பது தொடர்பில் வெளிவந்த அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
தாய்மொழிக் கல்வியை மேலும் வலுப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ள அவர்கள், தங்களுடன் இணைந்து தமிழ் கல்விப் பணியாற்ற முன்வாருமாறு தமிழறிஞர்கள், கல்விமான்கள், மொழிப்பற்றாளர்கள் ஆகியோருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தெடார்பில் அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது,