பிரான்சில் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக இறந்து கிடந்த பெண்
பிரான்சில் 77 வயது மதிக்கத்தக்க பெண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் Herault பகுதியில் உள்ள Agde-வில் இருக்கும் ரிசார்ட்டில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளுர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குறித்த பகுதியில் வசித்து வரும் தன்னுடைய தாய்க்கு, அவருடைய மகன் தொடந்து போன் செய்து வந்துள்ளார். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து சென்ற பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, மிகவும் கொடூரமான முறையில் அவரின் தாய் இறந்து கிடந்துள்ளார்.
அங்கிருக்கும் மேஜை ஒன்றின் மீது அந்த பெண்ணின் தலையும், சடலமும் தனியாக கிடந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உள்ளே வெளி ஆட்கள் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லாத காரணத்தினால், பொலிசார் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணி பெயர், விபரம் போன்றவைகளை பொலிசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.