பிரித்தானியாவில் வசிக்கும் 66 வயது முதியவருக்கு 129 குழந்தைகள்! எப்படி சாத்தியம்? சுவாரஸ்ய தகவல்
பிரித்தானியாவில் 66 வயது முதியவர் Sperm Donation செய்ததன் மூலம் சுமார் 129 குழந்தைகளுக்கு தந்தையாக மாறியுள்ளார்.
லண்டலில் ஆசிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் Clive Jones(66). இவர் Sperm Donation மூலம் இதுவரை 129 குழந்தைகளுக்கு தந்தை ஆகியுள்ளார். அது மட்டும் இல்லாமல் தற்போது இவரது விந்தணுவால் 9 பெண்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இவருக்கு 1978 ஆம் ஆண்டில் திருமணம் முடிந்த நிலையில் சில ஆண்டுகளிலயே கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகத்தில் லட்சக்கணக்கான தம்பதிகள் குழந்தைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அப்படி குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் தம்பதிகளை முகநூல் வாயிலாக தொடர்பு கொண்டு இந்த சேவையை செய்து வருகிறார்.
Clive Jones பணியில் இருந்து ஓய்வு பெற்றும் விந்தணு தானத்தை ஒரு சேவையாகவே செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 150 குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டு இந்த சேவையை நிறுத்தி விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கிலாந்தை பொறுத்தவரை 45 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டுமே சட்டபூர்வமாக Sperm Dontaion செய்ய முடியும். ஆனால் Clive Jones, 66 வயதை கடந்துவிட்டதால் முகநூல் மூலம் விந்தணு தேவைப்படும் தம்பதிகளை கண்டுபிடித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.