இனி ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்! UPI ஏடிஎம் அறிமுகம்
இனி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு UPI ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
UPI ஏடிஎம் (UPI-ATM)
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI ) என்பது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்டண முறை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைளில் அதிகமாகவும் உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறை வந்த பிறகு கடந்த செவ்வாய் கிழமை UPI ஏடிஎம் தொடங்கப்பட்டது. இந்த ஏடிஎம்மில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது.
இந்தியாவின் முதல் UPI ஏடிஎம் ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தால் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) உடன் இணைந்து தொடங்கப்பட்டது. இந்த ஏடிஎம்மில் டெபிட் கார்டு எடுத்துச் செல்ல தேவையில்லை. எந்த வித சிரமமும் இல்லாமல் இதன் மூலம் பணத்தை எடுக்கலாம்.
இதுகுறித்து நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) லைவ் மிண்ட் தனது அறிக்கையில், "சில வங்கி வாடிக்கையாளர்கள் QR அடிப்படையிலான பணத்தை எடுக்க இந்த ஏடிஎம் உதவும். மேலும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நட்பை மேம்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த சேவையானது இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ICCW) என்று கூறப்படுகிறது.
யுபிஐ-ஏடிஎம் (UPI-ATM) பயன்படுத்த நினைப்பவர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு அல்லது Ios சாதனங்களில் யுபிஐ அப்ளிகேஷனை வைத்திருக்க வேண்டும். மேலும், மொபைல் எண் மற்றும் ஒடிபி (OTP) -யை நம்பி இந்த பரிவர்த்தனை செயல்படுகிறது.
பணத்தை எப்படி எடுக்கலாம்?
* நீங்கள் பெறப்படும் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பின்னர், நீங்கள் தேர்ந்தெடுத்த தொகையுடன் தொடர்புடைய UPI QR குறியீடு திரையில் காண்பிக்கப்படும்.
* இதன்பிறகு QR கோடை ஸ்கேன் செய்வதற்கு உங்களது UPI பயன்பாட்டை பயன்படுத்த வேண்டும்.
* அடுத்து, உங்களது UPI பின் எண்ணை உள்ளிட்டதையடுத்து, பணம் வெளியே வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |