இறுதிப்போட்டியில் நுழைந்த மும்பை இந்தியன்ஸ்! WPLயில் இமாலய வெற்றி
மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹேலே மேத்யூஸ் மற்றும் நட் சிவர் ப்ரண்ட் ருத்ர தாண்டவம்
Brabourneயில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது. யஸ்டிகா பாட்டியா 15 ஓட்டங்களில் வெளியேற, ஹேலே மேத்யூஸ் மற்றும் நட் சிவர் ப்ரண்ட் ருத்ர தாண்டவம் ஆடினர்.
Hayley Matthews blasts Priya Mishra for three consecutive fours! ☄️#WPL2025 | (via @wplt20)
— Women’s CricZone (@WomensCricZone) March 13, 2025
pic.twitter.com/gK1OksYJZI
அதிரடி அரைசதம் அடித்த ஹேலே மேத்யூஸ் (Hayley Matthews) 50 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து வந்த அணித்தலைவர் ஹர்மன்பிரீத் சிக்ஸர்களை பறக்கவிட, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) 213 ஓட்டங்கள் குவித்தது.
நட் சிவர் ப்ரண்ட் (Nat Sciver-Brunt) 41 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 12 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்களும் விளாசினர்.
குஜராத் ஜெயண்ட்ஸ் தோல்வி
பின்னர் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 19.2 ஓவரில் 166 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. டேனியில்லே கிப்ஸன் 34 ஓட்டங்களும், போஎபே லிட்ச்பீல்ட் 31 ஓட்டங்களும், பார்த்தி ஃபுல்மலி 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
மிரட்டலாக பந்துவீசிய ஹேலே மேத்யூஸ் 3 விக்கெட்டுகளும், அமெலியா கெர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டியில் நுழைந்த மும்பை இந்தியன்ஸ், நாளை நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |