டாக்ஸி சாரதி... 10 வயது சிறுமி கொலை வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிய மூவரில் தந்தையும் ஒருவர்
பிரித்தானியாவில் 10 வயது சிறுமியின் கொலை வழக்கில் மூவர் வெளிநாட்டுக்கு தப்பிய நிலையில், அதில் உள்ளூர் டாக்சி சாரதியான சிறுமியின் தந்தையும் ஒருவர் என்பது அம்பலமாகியுள்ளது.
செய்யப்பட்ட சிறுமியின் தந்தை
அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை மாலிக் உர்ஃபான் ஷெரீப் என்பவர் எனவும், இவர் உள்ளூரில் வடாகை டாக்சி சாரதியாக உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
Credit: Swns
முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் கொலையில் தொடர்புடைய மூவர் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளனர் என்றே பொலிசார் உறுதி செய்துள்ளனர். வோக்கிங் அருகில் ஹார்சல் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வியாழக்கிழமை குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் ஷெரீப் தமது மனைவி பீனிஷ் மற்றும் பிள்ளைகளுடன் அந்த குடியிருப்புக்கு குடி வந்துள்ளார். சர்ரே நகரத்தில் வாடகை டாக்சி சாரதியாக செயல்பட்டுவரும் இவர், அப்பகுதியில் நன்கு அறியப்படும் நபராகவே உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டவரான மாலிக்
இந்த நிலையிலேயே சிறுமியின் சடலம் மீட்கப்படும் சில மணி நேரம் முன்னர், மூவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக சர்ரே பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Credit: Tiktok
பாகிஸ்தான் நாட்டவரான மாலிக் உர்ஃபான் ஷெரீப் கடந்த பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் குடியிருந்து வருகிறார். மட்டுமின்றி, வெளிநாட்டுக்கு தப்பியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரில் மாலிக் உர்ஃபான் ஷெரீப் என்பவரும் ஒருவர் என பொலிஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |