கோல் மழை பொழிந்த ஜேர்மன் கிளப் அணி!
மகளிர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் வுல்ப்ஸ்பர்க் அணி 8 - 2 என்ற கோல் கணக்கில் சென்ட் போல்டென் அணியை வீழ்த்தியது.
வுல்ப்ஸ்பர்க் - சென்ட் போல்டென் மோதல்
UEFA மகளிர் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஜேர்மனியின் கிளப் அணியான வுல்ப்ஸ்பர்க் மற்றும் அவுஸ்திரியாவின் சென்ட் போல்டென் அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே வுல்ப்ஸ்பர்க் வீராங்கனை லேனா கோல் அடித்து அசத்தினார்.
முதல் பாதியில் முன்னிலை
அதன் பின்னர் வுல்ப்ஸ்பர்க் அணியின் மெரினா 38வது நிமிடத்திலும், செஞ்சா ஹுத் 40வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சென்ட் போல்டென் அணி பதில் கோல் அடிக்காததால் முதல் பாதியில் வுல்ப்ஸ்பர்க் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் மேலும் ஆக்ரோஷமாக ஆடிய வுல்ப்ஸ்பர்க் அணி கோல் மழை பொழிந்தது. ஈவா (56), தாபியா (67) ஆகியோர் கோல் அடித்த நிலையில், பியா சோஃபி அடுத்தடுத்து (74, 76) இரண்டு கோல்கள் அடித்து மிரட்டினார்.
The number 7 Pauline Bremer getting Wolfsburg's EIGHTH of the night 8️⃣#UWCL LIVE NOW ⬇️
— DAZN Football (@DAZNFootball) December 22, 2022
?? ? https://t.co/sFXs7HswUD
?? ? https://t.co/5ToIeX12gg pic.twitter.com/u7776IhDct
சென்ட் போல்டென் அணியின் மடேஜா 78வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். அடுத்த 6வது நிமிடத்திலேயே வுல்ப்ஸ்பர்க்கின் பவுலின் ப்ரேமெர் கோல் அடித்தார்.
மிரட்டல் வெற்றி
இறுதியாக சென்ட் போல்டென் அணியினரால் 85வது நிமிடத்தில் ஒரு கோல் (ரீடா) மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் வுல்ப்ஸ்பர்க் 8 - 2 என்ற கோல் கணக்கில் மிரட்டல் வெற்றி பெற்றது. இதன்மூலம் வுல்ப்ஸ்பர்க் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.
Rita Schumacher gets another one for St. Poelten ??#UWCL LIVE NOW ⬇️
— DAZN Football (@DAZNFootball) December 22, 2022
?? ? https://t.co/sFXs7HswUD
?? ? https://t.co/5ToIeX12gg pic.twitter.com/fbcLd06C3U