திடீரென இறந்தும் மூன்று பேருக்கு உதவிய இளம்பெண்: தாய் பெருமிதம்
பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த இளம்பெண் ஒருவர் திடீரென இறந்தும், மூன்று பேருக்கு வாழ்வு கொடுத்துள்ளார்.
நல்லெண்ணம் கொண்ட மகள்
வடமேற்கு லண்டனில் வாழ்ந்துவந்த அபி (Abi Guojah, 32), பொதுவாகவே மற்றவர்களுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவர் என்கிறார் அவரது தாயான வாலரி (Valerie).
அபி, 2017ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவந்தபோது, அவரும் அவரது தோழிகளும் கடலில் நீந்திக்கொண்டிருக்க, திடீரென தொழி ஒருவருக்கு தண்ணீரில் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
நீந்தியவாறே தன் தோழியை கரைக்குக் கொண்டு வந்த அபி, அவருக்கு உதவி தேவை என சத்தமிட, அவருக்கு ஏற்ற நேரத்தில் உயிர் காக்கும் சிகிச்சை கிடைத்ததால் உயிர் பிழைத்துள்ளார் அந்த பெண்.
திடீரென இறந்தும் மூன்று பேருக்கு உதவிய இளம்பெண்
இந்நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார் அபி. அவர் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்து அவரது தாய் கூறவில்லை. ஆனால், அபி உடல் உறுப்புகள் தானம் செய்வதற்காக தன் பெயரை பதிவு செய்திருந்ததால், அபியின் இதயம், கணையம் மற்றும் சிறுநீரகங்கள் மூன்று பேருக்கு தானம் செய்யப்பட்டு, மூன்று உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
தன் மகள் ஏற்கனவே உடல் உறுப்புகள் தானம் செய்வதற்காக தன் பெயரை பதிவு செய்திருந்ததை அறிந்து தான் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார் அபியின் தாய்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |