ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பெண் இரத்தக்கட்டியால் மரணம்
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இரத்தக்கட்டி உருவாகி உயிரிழந்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த அந்த 34 வயது பெண்ணுக்கு ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இரத்தக்கட்டி உருவாகிய நிலையில், நேற்று அவர் மரணமடைந்தார்.
அவரது மரணம் தடுப்பூசியுடன் தொடர்புடையது போல் தோன்றுவதாக நிபுணர்கள் தெரிவித்தாலும், அவருக்கு ஏற்கனவே வேறு ஏதேனும் உடல் நல பிரச்சினைகள் இருந்தனவா என்பது குறித்து தெரியவரவில்லை.
இதற்கிடையில், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் உருவாகும் இந்த இரத்தக்கட்டிகள் பிரச்சினை அபூர்வமானது என கருதப்படுகிறது.
காரணம், அவுஸ்திரேலியாவில் 6.8 மில்லியன் பேருக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொண்ட 93 பேருக்கு மட்டுமே இந்த இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த 93 பேரில் ஆறு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளார்கள்.
இதற்கிடையில், இன்னொரு விடயம் என்னவென்றால், உயிரிழந்த அனைவருக்குமே வேறு ஏதேனும் உடல் நல பிரச்சினைகள் இருந்தனவா என்பது தெளிவாக தெரியவரவில்லை என்பதுதான்.