வெளிநாட்டில் இந்திய இளம் பெண் உயிருடன் புதைக்கப்பட்டு கொடூர கொலை: வெளிவரும் பகீர் பின்னணி
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு பகுதியில் முன்னாள் காதலியை கடத்திச் சென்று, உயிருடன் புதைத்து, அவர் மரணத்திற்கு காரணமான இந்திய வம்சாவளி இளைஞர் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
ஜாஸ்மீன் கவுர் கடத்தப்பட்டார்
அடிலெய்டு நகரின் வடக்கு பிளம்டன் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் 21 வயதான ஜாஸ்மீன் கவுர். இந்த நிலையில் 2021 மார்ச் மாதம் அந்த முதியோர் காப்பகத்தில் இருந்து ஜாஸ்மீன் கவுர் கடத்தப்பட்டார்.
@dailymail
இதே ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் காதலனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பொலிசாருக்கு புகார் ஒன்றையும் அளித்திருந்தார் கவுர். இதனையடுத்து பிப்ரவரி 9ம் திகதி பொலிசார் 21 வயதான தாரிஜ்கோட் சிங் என்பரை எச்சரித்து அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தான் மார்ச் மாதம் 5ம் திகதி ஜாஸ்மீன் கவுர் மாயமானதை அடுத்து, பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், தாரிஜ்கோட் சிங் மீது சந்தேகம் எழுந்தது. ஜாஸ்மீன் கவுரை கடத்தி சென்ற சிங், அவரது கை, கால்களை பிணைத்து மார்ச் 5ம் திகதி இரவு உயிருடன் புதைத்துள்ளார்.
@dailymail
பொலிசார் முன்னெடுத்த தீவிர சோதனையை அடுத்து, அவரது சடலம் மீட்கப்பட்டது. கைகள் கட்டப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில், ஜாஸ்மீன் கவுர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து தாரிஜ்கோட் சிங் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
துன்புறுத்த எந்த எண்ணமும் இல்லை
இதில் ஜாஸ்மீன் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளார். ஆனால், தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தமது காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தால் கொலை செய்ததாகவும், அவரை துன்புறுத்த எந்த எண்ணமும் இல்லை என்பதால், உயிருடன் புதைத்ததாக தாரிஜ்கோட் சிங் நீதிமன்ற விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
@dailymail
மருத்துவ சோதனையில், உயிருடன் புதைக்கப்பட்டதால், கவுர் மூச்சை இழுத்த போது அவரது சுவாசத்தில் மண் கலந்து மூச்சுக்குழாயை அடைத்துள்ளது என தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே, ஜாஸ்மீன் கவுர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், தாரிஜ்கோட் சிங் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |