மனைவியைக் குறித்து மோசமாக ஜோக்கடித்த பிரித்தானிய உள்துறைச் செயலர்: பதவிநீக்கம் செய்ய கோரும் பெண்
பிரித்தானிய உள்துறைச் செயலர், தன் மனைவியைக் குறித்து ஜோக் அடிக்க பயன்படுத்திய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
மனைவியைக் குறித்து மோசமாக ஜோக்கடித்த பிரித்தானிய உள்துறைச் செயலர்
திருமண வாழ்வு நீண்ட காலம் நீடிப்பது எப்படி என்பதைக் குறித்து பிரதமர் இல்லத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண்களிடம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி, மனைவிக்கு கொஞ்சம் மயக்க மருந்தைக் கொடுத்து அவளை அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தால், வெளியே கணவனைத் தவிர வேறு சிறந்த ஆண்கள் இருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியாமலே போய்விடும் என்று சொல்லி சிரித்திருக்கிறார்.
Image: PA
மேலும், தினமும் இரவு மனைவியின் மதுபானத்தில் கொஞ்சம் Rohypnol கொடுப்பது சட்டப்படி தவறாகாது என்றும் பெண்கள் முன் கூறி சிரித்திருக்கிறார் அவர். அந்த விடயம்தான் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பதவிநீக்கம் செய்ய கோரும் பெண்
விடயம் என்னவென்றால், இந்த Rohypnol என்பது, date-rape drug என்றே அழைக்கப்படுகிறது. அதாவது, இளம்பெண் ஒருவரை வெளியே அழைத்துச் செல்லும் ஆண், அல்லது மதுபான விடுதி ஒன்றில் ஒரு பெண்ணைச் சந்திக்கும் ஆண், அவருக்குத் தெரியாமல் இந்த மருந்தை அவரது பானத்தில் கலந்து, அவர் சுயநினைவை இழந்ததும், அவரை எங்காவது கொண்டு சென்று வன்புணரும் ஒரு குற்றச்செயல் பல மேலை நாடுகளில் பெரும் தலைவலியாக மாறிவருகிறது.
Image: Getty Images
அப்படி மயக்க மருந்து கலந்து சீரழிக்கப்பட்ட பெண்கள், நீண்ட காலமாக மனோரீதியாக அந்த சம்பவத்தால் பாதிக்கப்படுவார்கள் என்கிறார், True and Fair Party என்னும் கட்சியின் தலைவியான Gina Miller என்னும் பெண்.
தானே அப்படி பாதிக்கப்பட்டதாகவும், அப்படி பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையே பாழாகிவிடும் என்றும் கூறியுள்ள அவர், அப்படி ஒரு விடயத்தைக் குறித்து பிரித்தானிய உள்துறைச் செயலர் ஜோக் அடித்துள்ளார்.
ஆகவே, பிரதமர் ரிஷி, ஜேம்ஸ் கிளெவர்லியை பதவிநீக்கம் செய்யவேண்டும் என கோரியுள்ளார் Gina Miller.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |