வாடகைக்கு வீடு தேடிய இளம்பெண் இருவரால் துஷ்பிரயோகம்! அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலம் தலைநகரில் இளம்பெண்ணொருவர் வாடகை தேடி தரகரை நாடியபோது வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடு தேடிய இளம்பெண்
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் இளம்பெண்ணொருவர் வாடகைக்கு வீடு தேடியுள்ளார். அவருக்கு வீடு கிடைக்காத நிலையில் தரகர் ஒருவரை தொடர்புகொண்டுள்ளார்.
ஜிதேந்திர சவுத்ரி என்ற அந்த தரகர் வாடகைக்கு ஒரு வீடு இருப்பதாக ஒரு இடத்திற்கு அப்பெண்ணை வரவழைத்துள்ளார்.
அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஜிதேந்திர சவுத்ரியும், அவரது நண்பர் ஒருவரும் 30 வயதான குறித்த இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர்.
representation image
மயக்க மருந்து
கொடுத்து வன்புணர்வு அப்பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை அவர்கள் கொடுத்துள்ளனர். அதனை குடித்ததால் மயங்கி விழுந்த அப்பெண்ணை இருவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
தனக்கு நிகழ்ந்த கொடூரத்தை உணர்ந்த அப்பெண் உடனடியாக பொலிசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
iStock by Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |