மனைவியின் அந்த ஒற்றை ஆலோசனை... நாளுக்கு ரூ 5 கோடி சம்பாதிக்கும் தமிழர்: யார் இந்த தம்பதி
ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தான், தமது மனைவியின் அந்த ஒற்றை ஆலோசனையை பின்பற்றி தற்போது நாளுக்கு ரூ 5 கோடி அளவுக்கு சம்பாதிக்கிறார்.
மதுரை தமிழரான சுந்தர் பிச்சை
கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் மதுரை தமிழரான சுந்தர் பிச்சை.
2022ல் இவருக்கு அளிக்கப்பட்ட ஊதியமானது 22.6 கோடி அமெரிக்க கோலர் என்றே கூறப்படுகிறது. அதாவது இந்திய பண மதிப்பில் ரூ 1854 கோடி. நாளுக்கு சுமார் 5 கோடி ரூபாய் ஊதியம்.
ஐஐடி காரக்பூரில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த சுந்தர் பிச்சை, 2019ல் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மதுரையில் 1972 ஜூன் 10ம் திகதி பிறந்த சுந்தர் பிச்சை, சென்னையில் தான் வளர்ந்துள்ளார்.
வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு... கிராமப்பகுதியில் ரூ 8300 கோடி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்
அமெரிக்காவின் வார்டன் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்ற சுந்தர் பிச்சை 2004ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். ஆனால் ஒருகட்டத்தில் கூகிள் நிறுவனத்தில் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தாவ இருந்த சுந்தர் பிச்சையை, அந்த முடிவில் இருந்து மாற்றியவர் அவரது மனைவி அஞ்சலி என்றே கூறப்படுகிறது.
2019ல் தலைமை நிர்வாக அதிகாரி
அஞ்சலியின் ஆலோசனையை பின்பற்றிய சுந்தர் பிச்சை, தற்போது நாளுக்கு ரூ 5 கோடி சம்பளமாக பெறுகிறார். ஐஐடி காரக்பூரில் வைத்து தான் அஞ்சலியை சுந்தர் பிச்சை முதல் முறையாக சந்திக்கிறார்.
ராஜஸ்தானின் கோட்டா பகுதியை சேர்ந்த அஞ்சலி பின்னர் சுந்தர் பிச்சையின் மனைவியானார். Intuit மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியவர் அஞ்சலி. 1999 முதல் 2002 வரை அக்சென்ச்சரிலும் அஞ்சலி பணியாற்றியுள்ளார்.
அஞ்சலியின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு கூகிள் நிறுவனத்தில் தொடர்ந்த சுந்தர் பிச்சை 2019ல் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |