நடிகரை வெளியே போ என்று கோபமாக கத்திய பெண் நெறியாளர்.. டிவி விவாத நிகழ்ச்சியில் பரபரப்பு! வீடியோ
டிவி விவாத நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகரை வெளியே போ என்று பெண் நெறியாளர் கோபமாக கத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
HIT First Case, Paagal உள்ளிட்ட தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விஷ்வக் சென். இவர் சமீபத்தில் தனது புதிய படத்தை விளம்பரப்படுத்த சாலையில் prank செய்தது சர்ச்சையானது. அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில் prank செய்தது குறித்த விவாத நிகழ்ச்சி தொலைக்காட்சி ஒன்றில் நடந்தது. அதில் கலந்துகொண்ட விஷ்வக் சென்-ஐ பார்த்து 'மனச்சோர்வில் இருப்பவன்' என்றும் 'மனவளர்ச்சி குன்றியவன்' என்றும் பெண் நெறியாளர் குறிப்பிட்டார்.
Shocking!
— BINGED (@Binged_) May 2, 2022
The behaviour of the anchor here is utterly disgusting!#VishwakSen #TV9 pic.twitter.com/LsOGfdgleY
இதனால் கோபமடைந்த விஷ்வக் சென், உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் உள்ளது, புரிகிறதா? என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேச உங்களுக்கு உரிமை இல்லை என்றும், என்னை அப்படி அழைக்காதீர்கள், நாவை அடக்கி பேசுங்கள் என்றும் கூறினார்.
அதற்கு பதிலளித்த பெண் நெறியாளர் 'உடனே அரங்கை விட்டு வெளியே போ' என்று கோபமாக கத்தினார்.
நீங்கள் யார் என்னை வெளியே போக சொல்ல? இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறினார். மேலும் மோசமான ஆங்கில வார்த்தையை கூறிவிட்டு விஷ்வக் சென் அரங்கை விட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் தற்போது கோபத்தில் அந்த வார்த்தையை கூறியதாகவும், தவறான வார்த்தையை பேசியதற்கு மன்னிக்குமாறும் விஷ்வக் சென் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.