சுதந்திர தேவி சிலை அருகே 5 மாதக் குழந்தையுடன் உயிரிழந்த பெண்: நியூயார்க்கில் துயரம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் படகு கவிழ்ந்ததில் பெண்ணொருவர் 5 மாதக் குழந்தையுடன் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை அருகே, பெண்ணொருவர் ஐந்து மாதக் குழந்தையுடன் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.
சுதந்திர தேவி சிலை அருகே
நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலை அருகே சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

அதில் பலர் தண்ணீரில் விழ பெண்ணொருவரும், குழந்தையும் கவலைக்கிடமான நிலையில் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
அவர்கள் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிதாபமாக உயிரிழந்ததாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த பெண்ணும், குழந்தையும் உறவினர்களா? மற்றும் படகில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை.
சனிக்கிழமையன்று இரவு 10.30 மணிக்கு சற்று முன்னதாக இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |