கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்
தமிழகத்தில் கள்ளத்தொடர்பால் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (34) கொத்தனார். இவரது மனைவி கார்த்திகா (21).
இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை, மற்றும் ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண், திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவலளித்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை எடுத்துகொண்டு மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர், குழந்தை சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷப்பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும், குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தையை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது கார்த்திகாவின் செல்போன் எண்ணுக்கு வந்து, சென்ற அழைப்புகள் அழிக்கபட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த செல்போனுக்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது.
இதில் மாரயபுரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் அதிகநேரம் பேசியிருப்பதும், இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பலமுறை பேசியதும் தெரிய வரவே, கார்த்திகாவிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.
சுனிலை காவல் கஸ்டடியில் விசாரித்ததில் அவர் கார்த்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும், அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
கார்த்திகா வாக்குமூலத்தில், காதலில் மூழ்கி இரண்டு குழந்தைகளை கொன்றால் ஏற்றுகொள்வார் என நினைத்து சந்தேகம் வராமல் இருக்க சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கூறி, வீட்டை சுற்றி கணவனிடம் கூறி அவர் வாங்கி வந்த பாலிடா பொடியை எலிசாகுவதற்காக தூவி வந்து இருக்கிறார், பின்னர் சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்பு மாவில் கலந்து கொடுத்துள்ளார்.
உணவில் கலந்து கொடுத்தால் அவர்களது உடலில் இருந்து விஷத்தின் வாசனை வரவில்லை. மூத்த குழந்தை குறைவாக உப்புமா சாப்பிடாததால் தப்பித்து கொண்டது.
அந்த விஷயம் தாமதமாக தெரிய வரவே, மூத்த குழந்தையை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இதனிடையே மார்தாண்டம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தும் கார்த்திகாவை சிறையிலடைக்கும் பணிகள் நடந்து வருகிறது.