சிட்னியின் கூகி கடற்கரையில் பெண்ணை தாக்கிய சுறா மீன்: ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் பெண் ஒருவரை சுறா மீன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை தாக்கிய சுறா மீன்
சனிக்கிழமை சிட்னியின் கிழக்கு பகுதியில் உள்ள கூகி(Coogee) கடற்கரை பகுதியில் பெண் ஒருவரை சுறா மீன் கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சனிக்கிழமை காலை 11 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தில், பெண்ணை சுறா மீன் தாக்கியதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு தேவையான முதலுதவி சிகிச்சையை வழங்கினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவை குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சுறா மீன் கடித்ததில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மூடப்பட்ட கடற்கரைகள்
இந்த சுறா தாக்குதலை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகள் பாதுகாப்பிற்காக மூடப்பட்டது.
அத்துடன் சுறா மீனை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடற்கரைகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து அரசுடன் ஆலோசித்து வருவதாக அப்பகுதி மேயர் டிலான் பார்க்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |