பிரித்தானியாவில் பெண்ணை தாக்கிய நாய்கள் சுட்டுக்கொலை
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் பெண்ணை தாக்கிய இரண்டு நாய்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
நாய்களால் தாக்கப்பட்ட பெண்
கிழக்கு லண்டனில் உள்ள Tower Hamlets நகரில் பெண்ணொருவர் வளர்ப்பு நாய்களால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார், குறித்த நாய்களின் உரிமையாளரை விசாரிக்க சென்றுள்ளனர்.
அப்போது இரு நாய்களும் ஆக்ரோஷமாக பொலிசாரை நோக்கி குரைத்தன. மேலும் பொலிசாரை தாக்க அவை முயன்றபோது அதன் உரிமையாளர் நாய்களை தடுத்து வைத்தார்.
Google
சுட்டுக்கொன்ற பொலிஸார்
எனினும் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படவே, ஒரு கட்டத்தில் ஒரு நாயை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதனைத் தொடர்ந்து சிறிய இடைவெளியில் மற்றொரு நாயும் கொல்லப்பட்டது.
ஆபத்தான முறையில் நாயை கட்டுப்பாடில்லாமல் வைத்திருந்ததாகவும், நாய்கள் பெண்ணை தாக்கிய குற்றத்திற்காகவும் அதன் உரிமையாளரான நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், எந்தவொரு அதிகாரிக்கும் இது எளிதான முடிவு அல்ல, ஆனால் மேலும் காயம் ஏற்படுவதற்கு முன்பு தேவையான இடங்களில் செயல்பட வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது எனவும் அவர்கள் கூறினர்.