பிரித்தானியாவில் நாயுடன் நடைபயிற்சி சென்ற பெண் தாக்கப்பட்ட சம்பவம்: பின்னணி என்ன?
பிரித்தானியாவின் சஃபோல்க்-கில் நடைபயிற்சி சென்ற பெண் தாக்கப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது
பிரித்தானியாவின் சஃபோல்க்-கின்(Suffolk) பிராந்தாம் (Brantham) பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த ஒரு பெண் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் 57 வயதான அனிதா ரோஸ்(Anita Rose) எனக் கண்டறியப்பட்டுள்ளார்.
அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கிரேட்டில் உள்ள ஆடன்புரூக்ஸ் மருத்துவமனையில்(Addenbrooke's Hospital)சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
என்ன நடந்தது?
புதன்கிழமை காலை தனது ஸ்பிரிங்கர் ஸ்பானியல் நாயான புருஸுக்கு(springer spaniel, Bruce) நடைபயிற்சி அளிப்பதற்காக அனிதா ரோஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதையடுத்து ரெக்டரி சாலையின் அருகே உள்ள பாதையில் ஒன்றில் காலை 6:25 மணிக்கு அவர் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் விரைந்தன. இந்த தாக்குதல் சம்பவத்தில், உள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவர் கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். அவர் தற்போது விசாரணைக்காக காவலில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |