பிரித்தானியாவில் காலணிகளுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இளம் ஊழியர்: £30,000 இழப்பீடு வழங்க உத்தரவு
வேலைக்கு செல்லும் போது விளையாட்டு காலணிகள்(Sports Shoes) அணிந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 20 வயது பெண்ணுக்கு £30,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 2022 ஆம் ஆண்டில் எலிசபெத் பெனாசி(Elizabeth Benassi) என்ற இளம்பெண் மேக்ஸிமஸ் யுகே சர்வீசஸ்(Maximus UK Services) நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
பணிக்கு சேர்ந்த எலிசபெத் பெனாசி-க்கு நிறுவனத்தின் உடை விதிமுறைகள் குறித்து தெரியாமல் இருந்துள்ளது.
அலுவலகத்தில் இருந்த சக ஊழியர்கள் ஒரே மாதிரி காலணிகள் அணிந்திருந்த நிலையில் அவர்கள் எந்தவொரு தடையும் இல்லாமல் இருந்துள்ளனர்.
ஆனால் ஸ்னீக்கர்ஸ் அணிந்திருந்த எலிசபெத் பெனாசி தனிமைப்படுத்தப்பட்டார்.
வேலைவாய்ப்பு நீதிமன்ற விசாரணையின் போது, வேலைக்கு சேரும் போது 18 வயதாக இருந்த பெனாசி, தனது காலணி தேர்வை விமர்சித்த மேலாளரால் "குழந்தை போல்" நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், தனது வயது காரணமாக "அதிக கட்டுப்பாட்டுடன்" நடத்தப்பட்டதாக உணர்ந்த எலிசபெத் பெனாசி வழக்கு தொடர்ந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மேக்ஸிமஸ் யுகே சர்வீசஸ் மறுப்பு தெரிவித்தது.
விசாரணையின் இறுதியில் இந்த வழக்கை நீதிமன்றம் பெனாசிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
அத்துடன் எலிசபெத் பெனாசி-க்கு நிறுவனத்தின் பழிவாங்கல் செயலுக்காக £29,187 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |