24 வயதில் சொந்தமாக நிறுவனம்... ஆண்டுக்கு ரூ 1000 கோடி வருவாய்: தடைகளை தகர்த்த தேவிதா
24 வயதில் நிறுவனம் ஒன்றை உருவாக்கி, 8 ஆண்டுகள் கடுமையாக போராடி தற்போது ஆண்டுக்கு ரூ 1000 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றியிருக்கிறார் பெண் ஒருவர்.
தடைகளை மொத்தமாக தகர்த்து
Vu Televisions என்ற நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தேவிதா சரஃப் என்பவரே நீண்ட 8 ஆண்டுகள் போராடி தடைகளை மொத்தமாக தகர்த்து சாதித்தவர்.
மும்பை மாநகரில் பிறந்த தேவிதா தனது பட்டப்படிப்பை அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். Zenith Computers நிறுவனத்தின் தலைவரான ராஜ்குமார் சரஃப் என்பவரின் மகள் தான் இந்த தேவிதா சரஃப்.
இளம் வயதிலேயே தொழில்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தேவிதாவுக்கு இருந்துள்ளது. இதனையடுத்து Zenith Computers நிறுவனத்திலேயே வேலைக்கு சேர்ந்துள்ளார்.
விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும்
21 வயதில் சந்தைப்படுத்தல் துறையில் நிர்வாகஸ்தரானார். 2006ல் சொந்தமாக Vu Televisions என்ற நிறுவனத்தினை நிறுவினார். எல்இடி டிவிகள் மற்றும் பிற டிவிகளை உற்பத்தி செய்யும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அது.
தொடக்க நாட்களில் கடுமையாக போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல் 8 ஆண்டுகளில் Vu Televisions நிறுவனம் வெறும் ரூ 30 கோடி மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளது.
இருப்பினும் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் காரணமாக இறுதியில் தேவிதா வெற்றியடைந்துள்ளார். தற்போது தேவிதாவின் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 1400 கோடி என்றே கூறப்படுகிறது.
மேலும், தற்போது அமெரிக்காவில் குடியிருக்கும் தேவிதா இந்தியாவுக்கு திரும்பி இந்திய வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கவும் திட்டமிருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |