கணவரின் காதை கடித்து துப்பிய மனைவி.., டெல்லியில் நடந்த கொடூரம்
இந்திய தலைநகர் டெல்லியில் குடும்பத்தகராறு காரணமாக கணவரின் காதை மனைவி கடித்து துப்பிய சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காதை கடித்ததாக கணவர் புகார்
இந்திய தலைநகர் டெல்லியில் 45 வயதான நபர் ஒருவர் மனைவி காதை கடித்து துண்டித்ததாக பொலிஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர், "நான் டெல்லியின் சுல்தான்புரியில் வசித்து வருகிறேன்.
கடந்த 20 -ம் திகதி காலையில் என் மனைவி காரணம் இல்லாமல் என்னுடன் சண்டை போட்டார். நான் என் குழந்தைகளுடன் தனியாக வசிக்கவிருப்பதாகவும், வீட்டை விற்று பங்கு பணத்தை கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். அப்போது எனக்கும் அவரும் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டை வந்தது.
அப்போது நான் என் மனைவியை தள்ளிவிட்டேன். அந்த நேரம் நான் வெளியே செல்ல முயன்ற போது பின்னால் இருந்து கெட்டியாக பிடித்து வலது காதை கடித்தார். அப்போது நான் வலியால் துடித்தேன்.
என் வலது காதின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டதால் எனது மகன் மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ மனைக்கு என்னை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அறுவைசிகிச்சை
கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கணவரின் துண்டிக்கப்பட்ட காதை ஒட்டவைப்பதற்காக மற்றொரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |