கருப்பு நிறப் பைக்குள் கிடந்த மூதாட்டியின் சடலம்: பிரித்தானிய பூங்காவில் பரபரப்பு

United Kingdom Crime
By Thiru Aug 31, 2026 10:28 PM GMT
Report

Woman body discovered inside black bag at Liverpool: பிரித்தானியாவின் லிவர்பூல் பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் பைக்குள் மூதாட்டியின் சடலம்

லிவர்பூல் நகரின் ஸ்டான்லி பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் திணிக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.25 மணிக்கு பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் படி, அன்பீல்ட்(Anfield Stadium) மற்றும் எவர்டன் குட்டிசன்(Goodison Park) இடைப்பட்ட பகுதிக்கு அவசர சேவை பிரிவினர் விரைந்தனர்.

பின்னர் அப்பகுதியில் நடத்திய சோதனையில் பூங்காவின் சுற்றுச்சுவர் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் சடலம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

கருப்பு நிறப் பைக்குள் கிடந்த மூதாட்டியின் சடலம்: பிரித்தானிய பூங்காவில் பரபரப்பு | Woman Body Discovered Inside Black Bag At Stanley

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று திங்கட்கிழமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பிரேத பரிசோதனைகளுக்கு பிறகும், விசாரணை காரணங்களுக்காக விவரங்களை ரகசியமாக வைத்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆனால், கைப்பற்றப்பட்ட உடல் தோராயமாக 70 வயதுடைய பெண் உடல் என்றும், சுமார் 5 அடி 2 அங்குலம் உயரமும் சிறிய உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல வாரங்களாக அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

பொலிஸார் வேண்டுகோள்

காணாமல் போனவர்கள் குறித்த தரவு தளங்களில் உள்ள விவரங்களுடன் சரிபார்த்த போது கண்டெடுக்கப்பட்ட சடலத்துடன் பொருந்த கூடிய நபர் யாரும் இல்லை என்று அதிகாரி ரேச்சல் வில்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேல் குறிப்பிட்ட விவரங்களுடன் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US