பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் பெண்ணின் சடலம்: பாதுகாப்பு வளையம் அமைப்பு
Woman body found near premier league stadium: பிரித்தானியாவில் கால்பந்து மைதானத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பிரித்தானியாவின் பிரீமியர் லீக் மைதானத்திற்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பாதுகாப்பு வளையம்
லிவர்பூலின் பிரீமியர் லீக் கால்பந்து மைதானத்திற்கு அருகில் உள்ள ஸ்டான்லி பூங்காவிற்கு, நேற்றைய தினம் மதியம் காவல்துறையினர் விரைந்தனர்.
குறித்த பூங்காவில் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்தனர். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
மெர்சிசைட் காவல்துறையினர், பெண்ணின் மரணம் தற்போது விளக்கப்படாத ஒன்றாக கருதப்படுவதாக கூறியுள்ளனர்.
மேலும், பெண்ணை அடையாளம் காணவும், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்தின் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |