பூசாரி வீட்டு குழாய் நீரில் அடித்த துர்நாற்றம்: தெரியவந்த திடுக் உண்மை
Woman’s dismembered body found in overhead tank: தண்ணீர்த்தொட்டி ஒன்றில் பெண்ணொருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் கோயில் பூசாரியான ரமேஷ், வெளியூர் சென்றுவிட்டு திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார்.
குழாய்த் தண்ணீரில் ஏதோ துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த ரமேஷ், வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர்த்தொட்டியை சோதனையிட்டுள்ளார்.
தெரியவந்த திடுக் உண்மை
அப்போது தண்ணீர்த்தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் கவரில் மனித கைகால்கள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார் அவர்.

அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த பிளாஸ்டிக் கவரை கைப்பற்றியதுடன், அருகிலுள்ள வீடுகளின் மாடிகளிலும் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, மற்றொரு வீட்டின் மாடியிலும் ஒரு பிளாஸ்டிக் கவரில் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
முதல் கட்ட ஆய்வில், அவை 30 முதல் 40 வயது வரையுள்ள ஒரு பெண்ணின் உடல் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், அந்தப் பெண்ணின் உடலிலிருந்த நகைகள் மாயமாகியிருந்ததால், அவரை அவரது நகைகளுக்காக கொலை செய்திருக்கலாம் என்றும், கொலை செய்துவிட்டு, அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அவரது உடலை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மாடிகளில் மறைத்துவைத்திருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்துள்ள பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |