லண்டனில் பிறந்தும் கடவுச்சீட்டு வழங்க மறுப்பு: நாடற்றவராக்கப்பட்ட பிரித்தானிய பெண்
பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த பெண் ஒருவர், இதுவரை நாட்டுக்கு வெளியே சென்றிராத நிலையிலும் கடவுச்சீட்டு வழங்க மறுத்து அவரை நாடவற்றவர் என்ற நிலைக்கு தள்ளியுள்ளனர்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக
தெற்கு லண்டனின் ஹெர்ன் ஹில் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான ஏஞ்சலா ஜோன்ஸ். இவர் தமது சகோதரருடன் இணைந்து முதன்முறையாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.
Image: Angela Jones
ஆனால் இவரது சகோதரரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, இரண்டு வாரத்தில் கடவுச்சீட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏஞ்சலாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏஞ்சலாவின் தாயார் பிரித்தானிய குடிமகள் அல்ல எனவும், ஏஞ்சலா பிறந்தபோது இங்கிலாந்தில் அவர் தாயார் குடியேறியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளனர்.
இதனால், ஏஞ்சலா பிரித்தானியா கடவுச்சீட்டு பெற தகுதியற்றவர் எனவும், அவரது சகோதரருக்கு அப்படியான சிக்கல் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். தமக்கு கடவுச்சீட்டு வழங்க மறுத்துள்ளது விண்ணப்பத்தை சரிபார்த்தவரின் விருப்புரிமை என்றே தாம் கருதுவதாக ஏஞ்சலா குறிப்பிட்டுள்ளார்.
Image: Angela Jones
தகுதிகளை நான் பூர்த்தி செய்யவில்லை
22 வயதான தமது சகோதரருக்கு கடவுச்சீட்டு பெற தகுதி இருக்கும் போது, 23 வயதான தமது விண்ணப்பத்தை நிராகரிப்பதன் மர்மம் தமக்கு புரியவில்லை என்கிறார் ஏஞ்சலா.
இருவருக்கும் ஒரே முகவரி, ஆவணங்கள், பிறப்பு சான்றிதழ், தாயாரின் இறப்பு சான்றிதழ் மட்டுமின்றி உரிய தரவுகள் அனைத்தும் சமர்ப்பித்துள்ளோம் என ஏஞ்சலா தெரிவித்துள்ளார்.
சகோதரர் இரண்டு வாரத்தில் கடவுச்சீட்டு பெற்றுள்ள நிலையில், குடியுரிமைக்கான தகுதிகளை நான் பூர்த்தி செய்யவில்லை என குறிப்பிட்டதாக ஏஞ்சலா தெரிவித்துள்ளார்.
சகோதரருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்ட நிலையில் தமக்கு நிராகரிக்கப்பட்டதன் காரணத்தை விளக்க அவர்களால் முடியவில்லை எனவும் ஏஞ்சலா குறிப்பிட்டுள்ளார். இது விண்ணப்பத்தை சரிபார்த்தவரின் முடிவாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தரப்பு விளக்கமளித்துள்ளனர்.
Image: Angela Jones
அப்படியெனில், யார் பிரித்தானியர் என்பதை ஒரே ஒரு நபர் முடிவு செய்துவிடலாமா என்ற கேள்வியையும் ஏஞ்சலா எழுப்பியுள்ளார். பிறந்ததில் இருந்தே நாட்டைவிட்டு வெளியே செல்லாத தாம் பிரித்தானியரா இல்லையா என்பதை ஒருவர் முடிவு செய்துவிட முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கேயே பிறந்து வளர்ந்து, பணியாற்றி உரிய முறைப்படி வரியும் செலுத்தி வருகிறேன். ஆனால் பணி நிமித்தம் வெளிநாட்டில் ஒரு வாய்ப்பு அமையும் போது, அதை தடுப்பது போன்று இந்த விவகாரத்தை பார்க்கிறேன் என ஏஞ்சலா குறிப்பிட்டுள்ளார்.