ரூ.263 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கிய பெண்மணி: யாரிந்த ஆஷா முகுல் அகர்வால்
பரம் கேபிட்டல் நிறுவனத்தின் இயக்குனரான ஆஷா முகுல் அகர்வால் என்பவர் தெற்கு மும்பையில் 3 சொகுசு குடியிருப்புகளை வாங்கியுள்ளார் என்பது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மொத்த முதலீடு ரூ.263 கோடி
லோதா குழுமத்தின் லோதா மலபார் என்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் 24 மற்றும் 25வது தளங்களையே ஆஷா முகுல் அகர்வால் வாங்கியுள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒருங்கிணைந்த பரப்பளவு கிட்டத்தட்ட 19,254 சதுர அடி என்றே கூறப்படுகிறது.
இந்த குடியிருப்பின் மொத்த முதலீடு ரூ.263 கோடி என கூறப்படுகிறது. 25வது மாடியில் இரண்டு குடியிருப்புகளும் 24வது மாடியில் ஒரு குடியிருப்பும் அகர்வால் வாங்கியுள்ளார். இது தொடர்பான பரிவர்த்தனைகள் செப்டம்பர் 27 அன்று நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
இதே லோதா மலபார் குடியிருப்பு டவரில் தான் Taparia குடும்பம் ரூ.369 கோடிகள் செலவிட்டு 26, 27 மற்றும் 28வது மாடிகளில் குடியிருப்புகளை வாங்கியுள்ளது. தற்போது கட்டுமானத்தில் இருக்கும் இந்த குடியிருப்பு வளாகம் 2026ல் பயன்பாட்டிற்கு வரும் என்றே கூறப்படுகிறது.
பரம் கேபிட்டல் என்ற வர்த்தக நிறுவனமானது முகுல் அகர்வால் என்பவரால் 1993ல் துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் இயக்குனராக ஆஷா முகுல் அகர்வால் என்பவர் செயல்பட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |