மிருகத்தை தலையில் மிதித்து கொன்று சாப்பிட்ட பெண்! அதிர்ந்த அண்டைவீட்டார்
அமெரிக்காவில் பெண்ணொருவர் பூனையை தலையில் மிதித்து கொன்று, பின் அண்டைவீட்டார் முன்பு அதனை சாப்பிட்டதால் கைது செய்யப்பட்டார்.
27 வயது பெண்
ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண் Allexis Telia Ferrell. இவர் Canton-யின் 13வது வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டு வளாகத்தில் பலர் முன்னிலையில் செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Ferrell பூனை ஒன்றை அதன் தலையில் மிதித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் பல மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக அந்த விலங்கை சாப்பிட்டார்.
இது அண்டை வீட்டாருக்கு பாரிய அதிர்ச்சியை அளித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வழக்குகள்
அதனைத் தொடர்ந்து 16ஆம் திகதி இரவு 11 மணியளவில் Allexis Telia Ferrell பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது விலங்குகளை காயப்படுத்துதல், ஒழுங்கீனமான நடத்தை மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான தடைகள் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
திங்கட்கிழமை அன்று நடந்த விசாரணையின்போது, Ferrell ஒரு லட்சம் டொலர்கள் என அமைக்கப்பட்ட ஆரம்ப பாத்திரத்தைப் பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |