மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக 12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்: பிரான்சை உலுக்கியுள்ள ஒரு சம்பவம்
பிரான்சிலிருந்து ஜேர்மன் பொலிசாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, பிரான்சில் குடியிருப்பு ஒன்றில் 12 ஆண்டுகளாக அடைத்துவைத்து கொடுமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவரிடமிருந்து வந்தது தெரியவரவே, உடனடியாக அவர்கள் பிரான்ஸ் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
மொட்டையடிக்கப்பட்டு நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கபட்ட பெண்
ஞாயிற்றுக்கிழமையன்று, ஜேர்மன் பொலிசாருக்கு ஜேர்மன் எல்லையிலுள்ள பிரெஞ்சு நகரமான Forbachஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து அவசர உதவி கோரி ஒரு அழைப்பு வந்துள்ளது.
உடனடியாக, ஜேர்மன் பொலிசார் Moselle பகுதியிலுள்ள பிரெஞ்சு பொலிசாரை எச்சரிக்கவே, பிரெஞ்சு பொலிசார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு விரைந்துள்ளார்கள்.
Picture: Getty
நேற்று அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார், அங்கு பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், தலை மொட்டையடிக்கப்பட்டு, திரைச்சீலைகளால் மூடப்பட்ட ஒரு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.
அவரது கை விரல்களும், கால்களும் உடைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த 53 வயது பெண்ணை மீட்ட பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவரது நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Picture: Getty
நடந்தது என்ன?
அந்த பெண்ணின் கணவனான அந்த 55 வயது நபர், 2011ஆம் ஆண்டு அந்தப் பெண்ணைக் கடத்தி வந்து அந்த வீட்டில் அடைத்தாராம். 12 ஆண்டுகளாக அங்கு அடைக்கப்பட்டிருந்த அந்தப் பெண் கையில், ஞாயிற்றுக்கிழமை அவரது கணவரின் மொபைல் தற்செயலாகக் கிடைக்கவே, அவர் ஜேர்மன் பொலிசாரை அழைத்து உதவி கோரியுள்ளார். அந்தப் பெண்ணும் அவரது கணவரும் ஜேர்மன் குடிமக்கள் ஆவர்.
அந்த 55 வயது ஆண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டில் அந்தப் பெண் சத்தமிடுவதை அக்கம்பக்கத்து வீடுகளில் வாழும் மக்கள் கேட்டதாக தற்போது பொலிசாரிடம் தெரிவித்துளார்கள்.
அப்போதெல்லாம், தன் மனைவி புற்றுநோயால் அவதியுற்று வருவதாகவும், தாங்க முடியாத வலியில் அவர் சத்தமிடுவதாகவும் அந்த நபர் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |