என்னை சீரழித்துவிட்டார்... சுவிஸ் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய இளம்பெண்
இளம்பெண் ஒருவரின் சாட்சியத்தைக் கேட்பதற்காக சுவிஸ் நீதிமன்றம் ஒன்று பொதுமக்களை நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றிய சம்பவம் ஒன்று நடைபெற்றது.
கொலை, வன்புணர்வு, மனித இதயத்தைத் தின்றதாக குற்றச்சாட்டு
சுவிஸ் நீதிமன்றம் ஒன்றில் Alieu Kosiah என்னும் போராளி குழுவின் தலைவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த Kosiah, லைபீரியா நாட்டின் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்ற போராளிக்குழு ஒன்றின் தளபதியாவார்.
சுவிட்சர்லாந்தில் நிரந்த குடியிருப்பு அனுமதி பெற்று வாழ்ந்துவந்த Kosiah, 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். உள்நாட்டு யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக Kosiah மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தன் மீதான 22 குற்றச்சாட்டுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
கண்ணீர் விட்டுக் கதறிய இளம்பெண்
ஆனால், Kosiah மீதான மேல் முறையீட்டு வழக்கு வழக்கு துவங்கிய முதல் நாளே, அவர் மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையைக் காணவந்த பொதுமக்கள் திடீரென வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டதும், இளம்பெண் ஒருவர் Kosiah மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் சாட்சியம் அளிப்பதால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தனக்கு 14 வயது இருக்கும்போது Kosiah தன்னைப் பலமுறை வன்புணர்ந்ததாக கூறிய அந்த இளம்பெண், தான் அவருக்கு மனைவியாகப்போவதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அவருடன் செல்ல மறுத்தால் தன்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கண்ணீர் விட்டுக் கதறினார் அந்த இளம்பெண்.
ஆனால், அந்தப் பெண்ணை தான் சந்தித்ததேயில்லை என்று கூறியுள்ளார் Kosiah. ஒரு பெண் கண்ணீர் விட்டுக் கதறுவதால், அவர் சொல்வது உண்மை என்று ஆகிவிடாது என்றார் அவர்.
ஆனால், Kosiah ஒருமனிதனுடைய இதயத்தை வெட்டி வில்லைகளாக்கித் தின்றதை, தான் கண்ணால் பார்த்ததாக மற்றொருவர் சாட்சியமளித்துள்ளார். மற்றொருவரோ, Kosiah தன்னைக் கத்தியால் குத்தியதாகவும், பலரைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார்.
ஆக, ஏற்கனவே தனக்கு விதிக்கப்பட்டுள்ள 20 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து Kosiah மேல் முறையீடு செய்ய வந்துள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால், அவரது தண்டனை மேலும் அதிகரிக்கும் ஒரு சுழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.