வெறும் ஏழு பிறந்தநாட்களை மட்டும் கொண்டாடிய இளம்பெண்ணுக்கு வயது 28: ஒரு சுவாரஸ்ய செய்தி
தான் பிறந்தது முதல், இதுவரை வெறும் ஏழு பிறந்தநாட்களை மட்டும் கொண்டாடியதாக தெரிவிக்கிறார் பிரித்தானிய இளம்பெண் ஒருவர். ஆனால், அவருக்கு வயது 28. இதென்ன விந்தை?
ஏழு பிறந்தநாட்களை மட்டும் கொண்டாடிய பெண்ணுக்கு வயது 28
அந்த இளம்பெண்ணின் பெயர் ஜூலியா (Julia Alsop, 28). இங்கிலாந்திலுள்ள Warwickshire என்னுமிடத்தில் வாழும் ஜூலியா, பிப்ரவரி மாதம் 29ஆம் திகதி பிறந்தவர். அதாவது, லீப் வருடத்தில் பிறந்தவர்!
JULIA ALSOP
லீப் வருடம் குறித்து சில தகவல்கள்
அதாவது, நாம் பொதுவாக ஒரு வருடத்திற்கு 365 நட்கள் என்கிறோம் அல்லவா? ஆனால், உண்மையில் ஒரு ஆண்டுக்கு 365.25 நாட்கள். பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகின்றன, அல்லது முன்னூற்று அறுபத்தைந்தேகால் நாட்கள் என்று கூறலாம்.
ஆகவே, அந்த கால் நாளை கணக்கில் சேர்த்துக்கொள்வதற்காக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை காலண்டர் அல்லது நாள்காட்டியில் ஒரு நாள் கூடுதலாக சேர்க்கப்படுவதாகத் தெரிவிக்கிறார்கள் நாசா அதிகாரிகள்.
JULIA ALSOP
அப்படி அந்த ஒரு நாள் சேர்க்கப்படவில்லை என்றால், நமது காலண்டர்கள், இளவேனிற்காலம், கோடைக்காலம், இலையுதிர்காலம், குளிர்காலம் என பிரித்துவைக்கப்பட்டுள்ள பருவ காலங்களுடன் அல்லது சீசன்களுடன் ஒத்துப்போவதில் பிரச்சினை ஏற்படும்.
பிப்ரவரி மாதம் 29ஆம் திகதி பிறந்தவர்கள்
ஜூலியா, பிப்ரவரி மாதம் 29ஆம் திகதி பிறந்தவர் என்பதால், பிறந்தநாள் என்ற கணக்குப்படி, அவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். ஆக, அவர் இதுவரை ஏழு பிறந்தநாட்களை மட்டும்தான் கொண்டாடியிருக்கிறார். ஆனால், உண்மையில் அவருக்கு வயது 28 ஆகிறது.
JANE ATKIN
தனக்கு இன்று 7ஆவது பிறந்தநாள் என்று கூறினால், இவளுக்கு என்ன ஆகிவிட்டது என்பது போல எல்லோரும் பார்க்கிறார்கள் என்று கூறி சிரிக்கிறார் ஜூலியா.
ஜூலியவைப்போலவே, Jane Atkin என்பவர் தனது 15ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆனால், அவருக்கு வயது 60. Abi என்னும் குட்டிப்பெண் தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறாள், அவளுக்கு வயதோ 8. Joe Middleton என்பவர் தனது எட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார், ஆனால் அவருக்கு வயது 32. பிரித்தானியாவில் மட்டுமே, இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
JANE ATKIN
JO AND ABI
JO AND ABI
JOE MIDDLETON
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |