பிரித்தானியாவில் காவலர் சுடப்பட்ட விவகாரம்: 27 வயது பெண் மீது வழக்குப்பதிவு
woman charged in for Nottingham police officer shooting case: பிரித்தானியாவில் காவல்துறை அதிகாரி சுடப்பட்ட விவகாரத்தில் 27 வயது பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 4.50 மணியளவில் “ஏஞ்சல் ரோ” பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த நபர்களை காவலர் அணுகி விசாரித்த போது, அந்த நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் காவலரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
27 வயது பெண் மீது வழக்குப்பதிவு
இந்த விவகாரத்தில் தற்போது, ஹைசன் க்ரீன் பகுதியை சேர்ந்த ஆயிஷா ஜமான்(Aisha Zaman) என்ற 27 வயது பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அமைப்பின் ஆலோசனைகளை தொடர்ந்து, அவர் மீது தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தல் மற்றும் குற்றச் செயலில் ஈடுபடும் நோக்கத்துடன் ஆயுதத்தை உடன் வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஆயிஷா ஜமான் வெள்ளிக்கிழமை நாட்டிங்ஹாம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஆயிஷா ஜமான் தவிர, குற்றவாளி தப்பிக்க உதவியதாக 24 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்கள், 21 வயது மற்றும் 25 வயது இரண்டு பெண்கள் என மேலும் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.